தமிழ் சினிமாதான் பாரம்பரியம் மிக்கது. நல்ல படங்கள் இங்குதான் அதிகம் வருகிறது. எனவே எனக்கு தமிழ் மட்டுமே போதும் என்கிறார் சுனேனா.
காதலில் விழுந்தேன் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் வந்தவர் சுனேனா. தொடர்ந்து மாசிலாமணியில் நடித்தார்.இப்போது அவர் நடித்துள்ள வம்சம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அவர் பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வந்த யாதுமாகி நல்ல படம்தான். ஆனால் மக்களைச் சென்று சேரவில்லை. இப்போது "கதிர்வேல்' படத்தில் பாடல்கள் மட்டும்தான் பாக்கி. வம்சம் முடிந்த பின்தான் இனி, அடுத்த கதைகளையே கேட்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இப்போது வரை கதை கேட்கவில்லை.
வம்சம் படத்தில் நடித்தபோதுதான் கதைக்குத்தான் அதிக மரியாதை என்பதை உணர்ந்தேன்.இனிமேல் எந்தப் படமாக இருந்தாலும் கதை கேட்ட பிறகே நடிப்பேன்.
எனக்கு தமிழ் சினிமாவைத்தான் ரொம்பவும் பிடித்துள்ளது. இங்குதான் நல்ல படங்கள், கதைகள் உள்ளன. பாரம்பரியம் மிக்கதும் தமிழ் சினிமா மட்டுமே. எனவே இங்கு நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். மற்ற சினிமாவை நான் விரும்பவில்லை என்கிறார் வெளிப்படையாக.
Monday, July 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment