Sunday, April 18, 2010

கணினி மென்பொருட்களின் கூடம்

Apr 18.10
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே நம் கூகிள் மெயில் ஒரு கோப்பை இணைக்கும் போது Attach a File என்பதை கிளிக் செய்து இணைப்போம். இந்த வசதியை மேம்படுத்தி டிராக் & ட்ராப் (Drog & Drop) முறையை செயல்படுத்தியிருக்கிறது. இந்த வசதியை பெற எந்த ஒரு மென்பொருளையும், ப்ளக் இன்களையும் நிறுவ தேவையில்லை. உங்களிடம் பயர்பாக்ஸ் 3.0 மேல் அல்லது கூகிள் குரோம் புதிய பதிப்பு நிறுவி இருந்தால் போதுமானது.







நாம் கூகிள் குரோம் நிறுவ முயற்சி செய்தால் முதலில் 500 கேபி அளவுள்ள கோப்புகள் நம் தரவிறக்கிய பிறகு அதை இயக்கி பின்னர் அந்த மென்பொருள் மூலம் முழு கூகிள் குரோம் உலாவி நிறுவப்படும். ஆனால் இணைய இணைப்பு இருக்கின்ற கம்ப்யூட்டருக்கு சரி இணைய இணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு அலுவலகம் பெரு அலுவலகத்தில் ஒவ்வொரு கணிணியிலும் 20 எம்பி என்று தரவிறக்கினால் 50 கணிணிகளுக்கு 1 ஜிபி தரவிறக்க வேண்டியிருக்கும். இவர்களுக்காக சில முழு மென்பொருளையும் தரவிறக்க கூடிய மென்பொருட்களின் சுட்டி கொடுத்துள்ளேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மென்பொருள் ஒரு முறை தரவிறக்கி நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment