Sunday, April 18, 2010

உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குகின்றதா?

உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது பல புரோகிராம்கள் இயக்கப்பட்டு, பின்னணியில் இயங்கி இருப்பதுதான். இந்த புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரைத் தந்த நிறுவனம், தானே சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அனுப்பியிருக்கலாம்.
எம்.எஸ்.கான்பிக் மூலம் தேவையற்றதை எல்லாம் நீக்கிவிட்டேனே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அறியாமலேயே சில புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் தொடங்கி ராம் மெமரியை நிரப்பலாம். நீங்கள் நீக்கிய சில புரோகிராம்கள், மீண்டும் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கி பின்னணியில் இருக்கலாம்.


அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? ஸ்டார்ட் அப் ஆகும்போது என்ன என்ன புரோகிராம்கள் இயங்கி நிற்கின்றன என ஒன்றுவிடாமல் அறிய என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? WhatInStartup என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை கீழே தந்துள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேற்படி தளத்திலிருந்து இது ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்துப் பதிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment