Saturday, April 17, 2010

ஐ பேட் ( i Pad) : டிஜிட்டல் உலகில் புதிய அறிமுகம்

ஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.

மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்

No comments:

Post a Comment